தேமுதிக அதிமுக கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக சார்பில் நடைபெற பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் இடம்பெற்றுள்ளது.
பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத தேமுதிக, ஆரம்பம் முதலே கொஞ்சம் ஓவராய் தான் போய்க்கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிமுக பாமகவிற்கு 7 சீட் கொடுத்த பின்னர், தங்களுக்கு 7 அல்லது அதற்கு மேலான சீட்டுகளை கொடுத்தால் தான் கூட்டணி என அதிமுகவிடம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது தேமுதிக.
இதையடுத்து இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக, தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கும் தேமுதிக பிடிகொடுக்கவில்லை. இதனால் திமுக தேமுதிகவை கழற்றிவிட்டுவிட்டது.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதால் தேமுதிகவின் கூட்டணி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலையில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறப்பட்டது. மேலும் 1 ராஜ்ய சபா சீட்டும் தருமாறு கோரப்பட்டது. இந்நிலையில் தன் கட்சி நிர்வாகிகளுடன் விஜய காந்த் அவசரமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தங்கியிருக்கும் சென்னையிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு தற்போது தேமுதிக துணைச் செயலாளர் சுதீஸ் வந்துள்ளார்.
எனவே இன்னும் சில மணி நேரத்தில் தேமுதிக - அதிமுக வுடனான கூட்டணி ஒப்பந்தம் பற்றிய இறுதி முடிவு வெளியிடப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.