வர்தா புயல் காரணமாக நேற்று கனமழை பெய்தது. இருந்தும் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழாவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த அளவுகு உயரவில்லை.
வர்தா புயலால் நேற்று சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்து சேதம் பெரும் அளவில் ஏற்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் நேற்று முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழாவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த அளவுகு உயரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை பெய்யாததால் ஏரிகளில் தண்ணீர் குறைய தொடங்கியது. சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று பெய்த கனமழையால் ஏரிகளில் 41 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவேயாகும்.