Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகம் முதலிடம்: ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்ற அமைச்சர் கீதாஜீவன்!

Advertiesment
தமிழகம் முதலிடம்: ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்ற அமைச்சர் கீதாஜீவன்!
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:36 IST)
தமிழகம் முதலிடம்: ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்ற அமைச்சர் கீதாஜீவன்!
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக தமிழ்நாடு அரசு முதல் இடம் பெற்றதை அடுத்து அதற்கான விருதினை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்
 
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்கான விருது பெறும் மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று விருதினை வழங்கினார் 
 
இந்த விருதை தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மிகச் சிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பதும் தமிழகம் அனைத்து துறைகளிலும் படிப்படியாக முதலிடம் பெற்று முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் புத்தாண்டு முயற்சியை கைவிட வேண்டும்! – சசிக்கலா வேண்டுகோள்!