Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டை நிறுத்த வழக்கு போட கூடாதென்றால்..? - நீதிபதி விளக்கம்

ஜல்லிக்கட்டை நிறுத்த வழக்கு போட கூடாதென்றால்..? - நீதிபதி விளக்கம்
, திங்கள், 23 ஜனவரி 2017 (19:35 IST)
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் சரியானது. அப்படி வைத்து விட்டால் அதில் எந்த வழக்கும் போட முடியாது என முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேசினார்.


 

மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பெருத்த போராட்டத்திற்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில், தமிழக அரசு பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

அவசர சட்டம் கிடைத்துள்ளது என்பதை சட்ட வல்லுனரை வைத்து அணுகினோம். அதற்கான அரசின் அதிகார அறிக்கை வேண்டும் என்று கேட்டோம், இப்போதுதான் கொடுத்தார்கள். படித்து பார்த்தோம்.

நாங்கள் இங்கு வந்ததற்கு எந்த விதமான நோக்கமும் கிடையாது. பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு கொண்டாட மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் தமிழகம் முழுதும் லட்சக்கணக்கில் போராட்டத்தில் குதித்தீர்கள்

இதில் உள்ள சட்டம் சம்பந்தமாக புரிந்து கொள்ளல் வேண்டும். 7/5/2014 அன்று ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படி என்னவென்றால், மிருக வதை தடைச்சட்டத்தின் படி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துன்புறுத்தல் வதை ஆகும் என்று தெரிவித்தது.

அந்த வழக்கு மதுரையில் இருந்துதான் போயிற்று. ரேக்ளா பந்தயம் குறித்து விசாரித்த நீதிபதி ரேக்ளா மட்டுமல்ல, அனைத்து காளைகள் வைத்து நடத்தும் அனைத்துக்கும் தடை என்று அறிவித்தார். 2007இல் மேல் முறையீடு வந்த போது அவர்களும் 9/3/2007 பெஞ்ச் ரத்து செய்தது.

மிருக வதையை நடக்காமல் பார்த்து கொள்ளலாம். சாதாரண மக்கள் காயப்படுவதை தடுக்க தடை அரணை ஏற்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு விளையாட்டை முறைப்படுத்தத்தான் உத்தரவு பிறப்பித்தது.

2007இல் பிராணிகள் வதை தடைச் சட்டத்தின் கீழ் தடை கேட்டு பிராணிகள் நல வாரியம் சென்று தடை வாங்கியது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலமும் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. அது தவிர பொதுபட்டியல் உண்டு. அதில் சட்டம் இயற்றினால் அதில் திருத்தம் கொண்டு வரவேண்டுமானால், சட்டத் திருத்தம் தான் கொண்டுவர வேண்டும்.

இன்று காலையில் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்புகிறார். ஏன் சார் அவசர சட்டம் ரகசியமாக இருக்கு என்று. இன்று காலையில் அவசர சட்டம் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் உள்ளது.

ஏன் அதை அரசு வெளியிடவில்லை என்று தெரியவில்லை. அவசர சட்டம் என்றால் சட்டமன்றம் கூடாத வரைதான். சட்டமன்றம் கூடும்போது அதை சட்டமாக்க வேண்டும். சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் பின் அனுமதி வாங்க வேண்டும்.

மத்திய அரசு ஒத்துகொண்ட சட்டத்தை கொடுத்துள்ளதால் பின் அனுமதி கிடைக்கும். ஆகவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஜல்லிக்கட்டு நிற்பதற்கு வழிவகுக்கும். எல்லா சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்கலாம். அப்படி வரும்போது சட்டத்தை காப்பாற்றத்தான் இந்த திருத்தம்.

69 சதவீத இட ஒதுக்கீட்டை அட்டவணை 9 இல் சேர்த்துள்ளனர். அப்படி வைத்து விட்டால் அதில் எந்த வழக்கும் போட முடியாது. அதில் இதை சேர்க்கணும். இன்னும் பாதுகாப்பு வேண்டும் என்றால் சட்டமாக்கி டெல்லிக்கு அனுப்பி அரசமைப்பு சட்டம் அட்டவணை 9 இல் சேர்க்க வேண்டும்.

இதற்கு மேல் முடிவெடுப்பது உங்கள் இஷ்டம். நீங்கள் போராடியதன் விளைவுதான் இந்த சட்டம் வந்தது” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸுக்கும் கொடுங்க: மெரீனாவில் கலவரத்துக்கு முன்