Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ஈவிஎம் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்..!

Siva
புதன், 10 ஜூலை 2024 (08:56 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில வாக்கு சாவடிகளில் ஈவிஎம் இயந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகி வருவதாகவும் இதனால் தேர்தல் ஆணையம் மீது வாக்காளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணி முதல் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுவதாகவும் 110 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக ஐந்து வாக்கு சாவடிகளில் 30 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக மாம்பழப்பட்டு பகுதிக்குட்பட்ட ஒட்டன் காடுவெட்டி வாக்குச்சாவடி எண் 68-ல் உள்ள வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கின்றனர்.

அதேபோல் கருங்காலிபட்டு வாக்குச்சாவடி எண் 74, கல்பட்டு வாக்குச்சாவடி எண் 78, மாம்பழப்பட்டு வாக்குச்சாவடி எண் 66 ஆகிய வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments