Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக இல்லையென்றால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் வாங்கியிருக்க மாட்டார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Siva
வெள்ளி, 26 ஜூலை 2024 (19:25 IST)
திமுக கூட்டணி இல்லையென்றால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கார்த்தி சிதம்பரம் மேடை ஒன்றில் பேசியபோது கூட்டணி கட்சி என்பதற்காக திமுக செய்யும் அனைத்து தவறுகளையும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது என்றும் கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும் தான் என்றும் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது தான் காங்கிரஸ் கட்சியின் கடமை என்றும் பேசி இருந்தார்.

அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மேலிடம் இது குறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்த போது சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க கூடாது என்று பலர் டெல்லி சென்று புகார் அளித்தனர்.

அதையும் மீறி அவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அங்கு திமுக தான் அவரது வெற்றிக்கு முழுக்க முழுக்க உழைத்தது ,திமுக அவருக்கு உதவி செய்யவில்லை என்றால் அவர் டெபாசிட் பெறுவது பெறுவதே பெரிய விஷயமாக இருந்தது’ என்று கூறினார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமரியாதை செய்வதா? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்.!

விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து இல்லை.. ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து: விஜய்யின் ஓரவஞ்சனை

ஒரு நாளில் 1000 மிஸ்டு கால்.. காதலனுக்கு டார்ச்சர்! - கம்பி எண்ணும் காதலி!

அண்ணா மடியில் 3வயதில் உட்கார்ந்தவன் நான்: கமல்ஹாசனின் நெகிழ்ச்சி பதிவு..!

வன்கொடுமை செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி! பெண் பரபரப்பு புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments