Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஷாலுக்கு தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்.. ரூ.12 கோடி மோசடி செய்தாரா?

Advertiesment
நடிகர் விஷாலுக்கு தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்.. ரூ.12 கோடி மோசடி செய்தாரா?

Mahendran

, வெள்ளி, 26 ஜூலை 2024 (17:20 IST)
தயாரிப்பாளர் சங்கத்தில் ரூபாய் 12 கோடி மோசடி செய்திருப்பதாக விஷால் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கடந்த 2017-2019ஆம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.விஷால் அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது.
2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு தனி ஆடிட்டரை நியமித்தார். 
 
அந்த  தனி ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில், அப்பொழுது சங்கத்தில் இருந்த நிதியினை தவறான முறையில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.7கோடியே 50-லட்சம், மற்றும் 2017-2019 ஆண்டுகளில் வரவு-செலவு ரூ.5கோடியும் சேர்த்து சுமார் ரூ12-கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.
 
அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்திற்கு திரும்ப வேண்டும் என்று திரு.விஷால் அவர்களுக்கு பலமுறை தெரியப்படுத்தியும், அவர் இதுநாள் வரை எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.
 
ஆகவே, மேற்படி விஷயத்தினை சரிசெய்யும் பொருட்டு, ஏற்னகவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைப்படி பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் திரு.விஷால்-அவர்களை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டன்னிங்கான லுக்கில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் ஆல்பம்!