ஈரோடு இடைத்தேர்தலில் இதுவரை எதிர்க்கட்சிகள் சந்திக்காத தோல்வியை சந்திக்கும் என திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாகநடைபெற்று வருகிறது என்பதும் பொதுமக்கள் நீண்ட வாரிசுகள் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் ஈரோடு தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு இடைத்தேர்தலில் இதுவரை எதிர்க்கட்சிகள் சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும் மதச்சார்பற்ற கூட்டணி கைச்சின்னத்தில் இருக்கின்ற இளங்கோவன் என்ற வேட்பாளருக்கு என்னுடைய வாக்கை அளித்துள்ளேன் என்று கூறிய அவர் என்னை பொருத்தவரை தேர்தல் கமிஷன் பாரபட்சமின்றி தான் நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி அலுவலகத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர் கட்சி அலுவலகத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் கமிஷன் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் செய்தார்.