Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோசோல் இசைக்குழுவின் ஆத்மார்த்தமான இசையில் ஆர்ப்பரித்த ஈஷா!

Advertiesment
Isha
, திங்கள், 23 அக்டோபர் 2023 (09:48 IST)
ஈஷா நவராத்திரி விழாவின் 8-ம் நாளான இன்று (அக்.22) இந்தோசோல் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.


 
கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாகத் தினமும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நவராத்திரி கொண்டாட்டத்தின் 8-ம் நாளான இன்று பிரபல இந்தோசோல்  இசைக்குழு அதிரடியான இன்னிசை நிகழ்ச்சியை வழங்கியது. சென்னையை சேர்ந்த இந்த இசைக்குழு கடந்த 11 ஆண்டுகளாகப் புதுமையான வடிவத்தில் இசையை வழங்கி வருகிறது. பல்வேறு கலாச்சாரங்களில் பொதுவாக இருக்கும் அடிப்படை அம்சத்தை உள்ளடக்கி அவற்றைப் பாரதத்தின் பாரம்பரிய இசை வடிவத்தில் வழங்குவதே இந்தக் குழுவின் தனித்துவம்.

பாரதத்தின் பாரம்பரிய இசை வேர்களை மறவாமல், நம் பண்டைய இசையோடு புதுமையைப் புகுத்தி இதுவரையில் 4 தனிப்பட்ட ஆல்பங்களை வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து சில பாடல்களை இன்று அவர்கள் ஈஷாவில் இசைத்தனர். அரங்கம் அதிர அவர்கள்  வழங்கிய  ஆத்மார்த்தமான இசைவிருந்தை பார்வையாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

முன்னதாக, ஆலந்துரை அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. ரத்தினசாமி, நல்லறம் அறக்கட்டளை திரு. சந்திரசேகர் மற்றும் வெள்ளிங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த திரு. ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

ஈஷாவில் நவராத்திரி விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பாரம்பரிய ஆடைகள், அணிகலன்கள், ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்று வருகிறது. 9-ம் நாளான நாளை (அக்.23)  அக்‌ஷிதி செளதிரியின் ஒடிசி நடன நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே இரவில் 8 கடைகளில் கொள்ளை.. கோவில் உண்டியலும் காலி! – விராலிமலையில் மர்ம கும்பல்!