Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் பார்த்தால் நல்லா இருக்கிற குடும்பமும் உருப்படாமல் போய்விடும்: முதல்வர் ஈபிஎஸ்

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (17:04 IST)
பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பமும் உருப்படாமல் போய்விடும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அரியலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் என்பதும் இந்த நிகழ்ச்சி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் எம்ஜிஆர் குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்து குறித்து முதல்வரிடம் இன்று கேள்வி கேட்டபோது, ‘பிக்பாஸ் நடத்தி வரும் கமல் அனைத்து குடும்பங்களையும் கொடுத்து வருகிறார் என்றும் அவர் குறித்த கேள்விகளை எதையும் கேட்க வேண்டாம் என்றும் முதல்வர் தெரிவித்தார் 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு குடும்பத்தையும் கெடுத்து வருகிறது என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பம் உருப்படாது என்றும் அவர் கூறினார். பிக்பாஸ் நடத்துகிறவர் அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும் என்று நீங்களே சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பிய முதல்வர், கமல் படத்தில் ஏதாவது ஒரு பாடல் நல்ல பாடல் இருக்கிறதா? எம்ஜிஆர் படத்தில் இருப்பது போன்ற நல்ல கருத்துக்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்
 
மொத்தத்தில் கமல்ஹாசனை முதல்வர் பழனிச்சாமியே நேரடியாக விமர்சனம் செய்து உள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது என்றே கூறலாம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments