Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ என்னத்த கிழிச்சன்னு கோபப்படுற...? ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஷிவானி கூடவே அவரும்...

Advertiesment
நீ என்னத்த கிழிச்சன்னு கோபப்படுற...? ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஷிவானி கூடவே அவரும்...
, வியாழன், 17 டிசம்பர் 2020 (12:50 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த கோழி-நரி டாஸ்கில் யார் யார் எப்படி விளையாடினார்கள், யார் பெஸ்ட் பெர்பார்மென்ஸ், யார் ஒர்ஸ்ட் பெர்பார்மென்ஸ் என்பது குறித்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தெரிவித்தனர்.
 
இதில் நேற்று சோம் மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே வெடித்த சண்டை நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை தூண்டியது. இன்று வெளியான முதல் ப்ரோமவில் இது குறித்து கூறிய அர்ச்சனா சோம் மற்றும் ரம்யாவை நாமினேட் செய்து அவர் என்னதான் என் முட்டையை உடைத்து என்னை கடுப்பேற்றியிருந்தாலும் நரியா இருக்கும் போது நரியா இருந்த சோம் கோழியாக இருக்கும் போது கண்றாவியாக இருந்தார் எனக்கூறிவிட்டார்.
 
அதையடுத்து ஷிவானி ரூல்ஸை பிரேக் பண்ணாமல் விளையாடியதாக கூறி அவரை பாராட்டினார் பாலாஜி.  ஆனால், வீட்டில் இருந்த பெரும்பாலானோர் ஷிவானி மற்றும் கேபியை நாமினேட் செய்து அவர்கள் இருவரும் ஒர்ஸ்ட் பெர்பார்மென்ஸ் என முத்திரை குத்தி ஜெயிலுக்குள் தள்ளிவிட்டனர். 
 
இதனால் ஷிவானிக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு... அம்மாடி நீ அப்படி என்னத்த பண்ணின்னு இப்படி கோபப்படுற? இத்தனை நாளா தண்டமா வெளியில்  இருந்திங்க. இப்ப ரூம்ல போய் தூங்குங்க. அப்புறம் இந்த கேபி ஏதாச்சும் பேசணும்னு பேசினதை தவிர வேறு எதையும் உருப்படியா செய்யல... இப்போதான் சரியான முடிவெடுத்திருக்காங்க சபாஷ்...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத விட பெரிய துப்பாக்கியா எடுத்துட்டு வா விஷால்! – ஆர்யாவின் ‘எனிமி’ அப்டேட்!