Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ-பாஸ் இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகள்.. சோதனைச் சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!

இ-பாஸ் இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகள்.. சோதனைச் சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!

Mahendran

, செவ்வாய், 7 மே 2024 (11:36 IST)
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமல்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில்  இ-பாஸ் நடைமுறையால் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதியான கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வெளி மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த பலரும் இ-பாஸ் நடைமுறை தெரியாமல், நீலகிரிக்கு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். நெட்வர்க் பிரச்னை மற்றும் ஒரே நேரத்தில் பலர் இ-பாஸ் பெற முயற்சி செய்வதால் ஓடிபி வர தாமதமாகிறது. இ-பாஸ் பெறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் நிலை இருப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
அதேபோல கொடைக்கானல் பகுதியிலும் இ-பாஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பலர் வருகை தந்து இருப்பதாகவும் அவர்கள் ஆன்லைன் மூலம் இ-பாஸ் அப்ளை செய்து வருவதாகவும் இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இ_பாஸ் நடைமுறை இல்லை என்பதால் சிலர் காரை திருப்பி அனுப்பி விட்டு பேருந்துகளில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களில் சீசன் தொடங்கியுள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்க இ-பாஸ் நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!