இன்று சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மாநகர மேயர் பிரியா வெளியிட்ட நிலையில் அதில் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி 2025 பட்ஜெட் சிறப்பு அறிவிப்புகள்:
சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் இருந்து 4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 200 வார்டுகளில் வார்டு மேம்பாட்டு நிதி 50 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 70 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
மகளிர் சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வொர்க் மற்றும் டேலி உள்ளிட்ட கணினி பயிற்சிகளை இலவசமாக வழங்க ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை பள்ளிகளில் 9-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளின் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளவும், நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ளவும் ஆங்கில பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
கடந்த ஆண்டு சென்னைக்கு ரூ.4,464 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.681 கோடி உயர்த்தப்பட்டு ரூ.5,145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 262.52 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை இந்த ஆண்டில் 68.57 கோடியாக இருக்கும் என மேயர் பிரியா கூறியுள்ளார்.
Edit by Prasanth.K