அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நேற்று இரவு புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விடிய விடிய விசாரணை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐந்து நாட்கள் காவலில் எடுத்துள்ள அமலாக்கத்துறை, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய பத்து மணி நேரமாக விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி இடம் மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினந்தோறும் 50 கேள்விகள் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.