இந்திய பங்கு சந்தை நேற்று மிக மோசமாக சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தனர் என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், சற்று உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்து 77,830 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்கு சந்தை நிப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 23,590 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்கு சந்தையில் கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டேட் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, டாடா ஸ்டீல், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, எஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேநேரம், டாடா மோட்டார்ஸ், மணப்புரம் கோல்டு, ஐடிசி, சிப்லா உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. பங்கு சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ள நிலையில், தற்போது நல்ல முதலீட்டாளர்கள் ஆலோசனை பெற்று முதலீடு செய்வது லாபத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.