Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 வருஷமா பதிவு செய்யாதவர்களுக்கு 3 மாதம் கால அவகாசம்! – வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு!

Advertiesment
3 வருஷமா பதிவு செய்யாதவர்களுக்கு 3 மாதம் கால அவகாசம்! – வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு!
, ஞாயிறு, 30 மே 2021 (12:13 IST)
கடந்த 2017 முதலாக தமிழக வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதியாதவர்கள் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரி மாணவர்கள் வரை அனைவரும் தங்கள் படிப்பு தகுதியை தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அவற்றை புதுப்பிக்க வேண்டியதும் அவசியமாகும்.

இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்ய, புதுப்பிக்க தவறுபவர்களுக்கு கால அவகாசம் அவ்வபோது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் 3 மாதங்களுக்குள் இணையம் வாயிலாக புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய பழங்குடி பெண்களை கொன்றாரா பில்கேட்ஸ்!? – கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்!