ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க ஸ்டெர்லைட்டின் இரண்டாவது அலகிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி இன்று முதல் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அரசு அனுமதி அளித்தது.
இரண்டு ஆக்ஸிஜன் அலகுகள் கொண்ட ஸ்டெர்லைட் ஆலையில் முதல் அலகில் கடந்த 13ம் தேதி முதலாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் இரண்டாம் அலகிலும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.