அவசர சட்டத்திற்காக இன்று மாலை தமிழகம் வரும் ஆளுநர்!
, சனி, 21 ஜனவரி 2017 (10:28 IST)
ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குகள் நல வாரியமான பீட்டா தொடர்ந்த வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத காரணத்தால், வெகுண்டெழுந்த மாணவர்கள், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதில் பீட்டாவை தடைசெய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை தமிழகம் வரவிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்