Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் போராட்டத்தில் நடிகர் விஜய்: புகைப்படங்கள் உள்ளே!

மக்கள் போராட்டத்தில் நடிகர் விஜய்: புகைப்படங்கள் உள்ளே!

Advertiesment
மக்கள் போராட்டத்தில் நடிகர் விஜய்: புகைப்படங்கள் உள்ளே!
, சனி, 21 ஜனவரி 2017 (10:20 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில் பிரபல தமிழ் நடிகர் விஜய் நேற்று இரவு கலந்து கொண்டார்.


 
 
பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள் என சினிமா துறையை சேர்ந்த பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறியும் மக்கள் போராட்டத்திலும் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் ஒரு சில நடிகர்களையும் அரசியல் தலைவர்களையும் அவர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.

webdunia

 
 
இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கலந்து கொண்டார்.

webdunia

 
 
முன்னதாக நடிகர் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். மேலும் நேற்று நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் இலவசம்! எங்கு, எப்படி தெரியுமா?