Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிருடன் கொளுத்தப்பட்ட யானை: 3 மாத ரணவலிக்கு பின் மரணம்!

Advertiesment
உயிருடன் கொளுத்தப்பட்ட யானை: 3 மாத ரணவலிக்கு பின் மரணம்!
, சனி, 23 ஜனவரி 2021 (10:34 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ElephantDeath எனும் ஹேச்க்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
நீலகிரியில் மாவநல்லா பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு யானையை காட்டுக்குள் திருப்பியனுப்ப டயரில் தீவைத்து கொளுத்தி யானை மீது வீசியதில் அதன் காது, முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 
 
3 மாதங்களாக முதுகில் காயங்களுடன் சுற்றித்திரிந்த அந்த யானை ஜனவரி 19 ஆம் தேதி உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வத்தளங்களில் வெளியாகி பலர் மனதை ரணமாக்கியது. 
 
இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவைத்ததாக 2 பேரை வனத்துறை கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ElephantDeath எனும் ஹேச்க்டேக் டிரெண்டாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: 6 பேர் கைது !!