Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவனுக்கு நாகலிங்க பூவை பூஜிப்பதின் பலன்கள் !!

Advertiesment
சிவனுக்கு நாகலிங்க பூவை  பூஜிப்பதின் பலன்கள் !!
, வெள்ளி, 22 ஜனவரி 2021 (23:56 IST)
"நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான்.
 
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
 
பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை. நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
 
நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை  உணர்ந்திடலாம்.
 
ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.
 
ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள். இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க  பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...?