மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் என கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் கட்சியை ஆரம்பித்தார். அவர் எதிர்பார்த்த கட்சி ஆரம்பத்தில் வளர்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அவர் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.
அதன்பின், பிக்பாஸ் மற்றும் சினிமாவில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவர் நடிப்பில் விக்ரம் வெளியான நிலையில், விரைவில் இந்தியன் 2 வெளியாகவுள்ளது. அவ்வப்போது, அரசியல் குறித்து கருத்துக் கூறி வரும் கமல் ஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பல்கலைகளில் துணை வேந்தரை நியமிப்பது மாநில அரசின் உரிமை என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டதிருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் கொண்ட சட்டசபைக்கு மதிப்பு அளித்து, விரைவில் சட்ட திருத்தத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்வும் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது போன்று கவர்னர் தேர்விலும் தேர்தல் முறை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.