Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

INS Vikrant விமானம் தாங்கி போர்க் கப்பல் சிறப்பம்சங்கள்!

INS Vikrant விமானம் தாங்கி போர்க் கப்பல் சிறப்பம்சங்கள்!
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (18:32 IST)
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் சிறப்பம்சங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்…


இந்தியா ராணுவத்திற்கான போர்க்கப்பல்களை முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்திய கடற்படைக்காக விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்துடன், ராணுவ அமைச்சகம் 2007 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது.

அதன் பிறகு 10 ஆண்டுகளாக கப்பல் கட்டும் பணிகள் நடந்து வந்தது. பின்னர் 4 கட்டங்களாக போர்க்கப்பல் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. இன்று இந்த போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் 76 சதவீதம் பொருட்களும் உள்நாட்டு தயாரிப்புகளே. இந்த கப்பைல் இருந்து 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டரை இயக்க முடியும். இந்த விக்ராந்த் கப்பல் இந்திய கடற்படைக்கும் மேலும் பலம் கூட்டுவதாக அமைந்துள்ளது.
webdunia

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் சிறப்பம்சங்கள்:
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் நீளம் – 262 மீ
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் அகலம் - 62 மீ
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் உயரம் – 16.79 மீ
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின்கட்டுமான செலவு – ரூ.19,341 கோடி
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் எடை – 40,000 டன்கள்
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலில் உள்ள மொத்த அறைகள் – 2,300
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் டிசைன் வடிவமைக்கப்பட்ட ஆண்டு – 1999
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் இந்திய ராணுவ அமைச்சகம் ஒப்ப்ந்தம் செய்த ஆண்டு – 2007
  • ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட ஆண்டு – 2009
  • இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட சுமார் 7 மடங்கு பெரிய கப்பல் இது.
  • ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இக்கப்பலுக்கு உண்டு.
  • இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைகள், சி.டி. ஸ்கேன் என ஒரு மினி மருத்துவமனையே உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கார் வழிமறிப்பு: தெலுங்கானாவில் பரபரப்பு