Publish Date: Thu, 05 Jan 2023 (11:58 IST)
Updated Date: Thu, 05 Jan 2023 (12:00 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா அவர்கள் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது இது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியான 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது என்றும் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அதே கட்சிக்கு மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அந்த தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
Mahendran
Publish Date: Thu, 05 Jan 2023 (11:58 IST)
Updated Date: Thu, 05 Jan 2023 (12:00 IST)