Publish Date: Mon, 01 Aug 2022 (16:44 IST)
Updated Date: Mon, 01 Aug 2022 (16:46 IST)
அதிமுக உள்கட்சி பிரச்சனை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் முக்கிய தகவல் அளித்துள்ளார்.
இன்று தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரிவில் உள்ளவர்கள் உள்பட பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
அப்போது அதிமுக உள்கட்சி பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தகுந்த நேரத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.