Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது: அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது: அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!

சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி செல்லாது: அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!
, வியாழன், 23 மார்ச் 2017 (14:55 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டுக்கும் வழங்காமல் முடக்கியது தேர்தல் ஆணையம். இதனையடுத்து அடுத்ததாக சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்படும் என தகவல்கள் வருகின்றன.


 
 
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நேற்று தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் நியமனம் குறித்து இப்போது வாதிட வேண்டாம் என கண்டிப்புடன் கூறிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தொடர்ந்து ஓபிஎஸ் அணி வழக்கறிஞர் வைத்த வாதத்தை கேட்டு அதிர்ந்து போய் பதில் ஏதும் சொல்லாமல் இருந்துள்ளார்.
 
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடியபோது, சசிகலா உச்ச நீதிமன்றத்தால் குற்றாவளி என தீர்ப்பிடப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
தண்டனை பெற்ற குற்றவாளியான சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெறாது. ஒரு குற்றவாளி வேட்பாளரை பரிந்துரைப்பதும், அந்த வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்குவதும், அதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.

webdunia

 
 
இது தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என கூறினார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் சசிகலா அணியினர் மௌனமாக இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் அந்த அறிக்கையில் இந்த வாதத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது. எனவே பொதுச்செயலாளர் நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்தில் விசாரணை வரும் போது இதனை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் சசிகலாவின் நியமனம் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த குழந்தையே தினகரன்தான் சார்... நாஞ்சில் சம்பத் புகழுரை..