கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாகி மணல் அள்ளுவது குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய அவர் தேர்தலில் திமுக வென்றதும் மாட்டுவண்டியில் ஆற்று மண் அள்ளுபவர்களுக்கு மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும், எந்த அதிகாரியாவது தடுத்தால் தன்னிடம் தெரிவிக்கும்படியும், அதிகாரியே மாற்றப்படுவார் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசுதல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி மீது தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.