Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் நாளே ரூ.1 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பு

முதல் நாளே ரூ.1 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பு
, செவ்வாய், 12 மார்ச் 2019 (07:45 IST)
நேற்று முன் தினம் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்த அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஆரம்பமாகிவிட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை சோதனையிலும் ஈடுபட தொடங்கிவிட்டது. தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் நேற்று ஒரே நாளில்  ஒரு கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
 
திருவாரூர் மாவட்டம் காணூர் சோதனை சாவடியில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே 19 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் கைப்பற்றப்பட்டு சங்கர் என்பவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் திருமாந்துறை முதல் லப்பைகுடிக்காடு வரையில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
 
உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் அந்த பணம் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் உரிய ஆவணத்துடன் பணத்தை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலை குறித்து பேசினால் வேட்பாளர் தகுதிநீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி