Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் தேதியில் மாற்றமா? ஆலோசனையில் தமிழக தேர்தல் ஆணையம்

தேர்தல் தேதியில் மாற்றமா? ஆலோசனையில் தமிழக தேர்தல் ஆணையம்
, திங்கள், 11 மார்ச் 2019 (09:56 IST)
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியை மற்றி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
 
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ந் தேதி தொடங்கி மே 19ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை 2வது கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது மே 23ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் ஏப்ரல் 17 மற்றும் 19-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து மதுரைக்கு  லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவிற்கு வருகை தருவதால் வாக்களிப்பதில் சிரமம் இருக்கும் ஆகவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
இதுசம்மந்தமாக ஆசோசனை நடத்தப்பட்டு விரைவில் முடிவு சொல்லப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.ஜே.கே.வுக்குக் கள்ளக்குறிச்சி கிடையாது – யோசனையில் பாரிவேந்தர் !