இரட்டை இலை விவகாரம்: நேரில் ஆஜராக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் உத்தரவு!
, புதன், 11 டிசம்பர் 2024 (08:01 IST)
இரட்டை இலை குறித்த விவகாரத்தில் இன்று ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னம் குறித்த நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நான்கு வாரத்திற்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் டிசம்பர் 19 ஆம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து, இருவரும் தேர்தல் ஆணையத்தில் வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அப்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்