Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காரசாரமாக விவாதம் நடந்தபோது சட்டசபையில் தூங்கிய அதிமுக எம்.எல்.ஏ..

Advertiesment
காரசாரமாக விவாதம் நடந்தபோது சட்டசபையில் தூங்கிய அதிமுக எம்.எல்.ஏ..

Siva

, திங்கள், 9 டிசம்பர் 2024 (16:25 IST)
இன்று சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக எம்எல்ஏ ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததாக பரவி வரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், முதல் நாளில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் போது நடந்த விவாதம் காரசாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சட்டசபையில் ஒரு பக்கம் காரசாரமான விவாதம், அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில், சபாநாயகரின் கலகலப்பான பேச்சு ஆகியவை நிகழ்ந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ உடுமலை ராதாகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன், தற்போது உடுமலை தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் காணொளி நெட்டிசன்களால் கேலி, கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா? ரகசிய பேச்சு என தகவல்..!