Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான் - சீமான் பேச்சு

sinoj
வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:48 IST)
மக்களவை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.
 
இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி, மைக் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.
 
இன்று  சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரா. கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப் பேட்டையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது; ''தேர்தல் ஆணையமே ஒரு நாடகக் கம்பெனி. அப்பாவி மக்களிடம் பணத்தைப் பிடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்கிற்குப் பணம் கொடுப்பதை தடுப்பதில்லை. தொழில் நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும். எனக்கு விழும் வாக்கை தாமரைக்கு விழுவது போல் மாற்றியமைக்க தொழில் நுட்பத்தால் முடியும். பல  உலக நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையைக் கைவிட்டு விட்டது.  வாக்குப்பதிவு  இயந்திரத்தை தயாரிக்கும் ஜப்பான் நாட்டிலும் வாக்குச் சீட்டுத்தான் நடைமுறையில் உள்ளது'' என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments