Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு மட்டுமல்ல, கேரளாவில் கணக்கை தொடங்குகிறது பாஜக.. எத்தனை தொகுதிகளில் வெற்றி?

Advertiesment
Amitshah

Mahendran

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (15:18 IST)
தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவுக்கு போட்டி ஆகத்தான் உள்ளது என்றும் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஒரு எம்பிஐ கூட பாஜக பெற முடியாது என்றும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் தமிழ்நாட்டில் பாஜக மூன்று தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் இதுவரை எம்பி தொகுதியை கைப்பற்றாமல் இருந்த பாஜக அங்கும் தனது கணக்கை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கேரளாவை பொறுத்த வரை மொத்தம் 20 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் காங்கிரஸ் 7, சிபிஎம் 5, சிபிஐ 1, மற்ற இதர கட்சிகள் ஒவ்வொன்றாக வெற்றி பெறும் என்று கூறியுள்ள இந்தியா டிவி பாஜக 3 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது 
 
குறிப்பாக திருவனந்தபுரத்தில் ராஜீவ் சந்திரசேகர், பத்தனம்திட்டா தொகுதியில் அனில் ஆண்டனி மற்றும் அட்டிங்கல் என்ற தொகுதியில் முரளிதரன் ஆகிய மூவரும் ஜெயிப்பார்கள் என்று கூறியுள்ளது 
 
திருவனந்தபுரம் தொகுதியில் பலம் வாய்ந்த சசிதரூரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு