Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது தவறு- தேமுதிக.துணை பொ.செ., சுதீஸ்

Advertiesment
முதல்வர் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது தவறு- தேமுதிக.துணை பொ.செ.,  சுதீஸ்
, சனி, 18 பிப்ரவரி 2023 (14:39 IST)
முதல்வர் முக.ஸ்டாலினை தரக்குறைவாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது தவறு என்று தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில், தென்னரசு போட்டியிடுகிறார். அதேபோல், தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து, இன்று தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஸ் ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள மணல் மேடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் இணைந்து விஜயகாந்தின் மகன் பிரபாகரனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, செய்தியாளர்கள் சுதீஸிடம் முதல்வர் முக. ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்கு, அவர் முதல்வரை எடப்பாடி பழனிசாமி அப்படி விமர்சித்திருந்தால் அது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!