Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான கட்டணம் உயர்வு- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

edapadi palanisamy
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (16:05 IST)
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், சொத்து வரி பெயர் மாற்றத்திற்காண கட்டணத்தை 20 ஆயிரமாக உயர்த்த இந்த முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

''விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, அரசின் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று தமிழக மக்கள் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சொத்து வரி பெயர் மாற்றத்திற்காண கட்டணத்தை 20 ஆயிரமாக உயர்த்த இந்த முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது.

நல்ல அரசு என்பது மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள்,பத்திரங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில், எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், எனவே சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காண கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலையில் வரும் 10-ம் தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்