Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞரின் வாழ்க்கை வரலாறு: வைரமுத்துவிடம் கோரிக்கை வைத்த முதல்வர்

karunanidhi, vairamuthu
, திங்கள், 1 ஜனவரி 2024 (20:48 IST)
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம்,  இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை, நடிகரும் மக்காள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
இந்த விழாவில் வைரமுத்துவின் மக கவிதை என்ற நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட, நாடாளுமன்ற  உறுப்பினர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
 
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை கவிதையாக தரவேண்டும், இது எனது அன்பான வேண்டுகோள், உங்கள் தமிழில் கலைஞருக்கு ஒரு கவிதை வரலாறு வரவேண்டும் என உங்கள் ரசிகனின் வேண்டும். இன்னும் உரிமையாகச் சொன்னால் எனது கட்டளை'' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  நான் கவிஞனும் அல்ல, கவிதை விமர்சகனும் அல்ல, கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால் மகா தீட்டிய கவிப்பேரரசு வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்..! உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!