ஜெயலலிதாவின் வாரிசுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிச்சாமி!
ஜெயலலிதாவின் வாரிசுக்கு ஆப்பு வைத்த எடப்பாடி பழனிச்சாமி!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை. எனவே அவரது அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் தான் அவரது வாரிசாக தற்போது கருதப்படுகிறார்கள். ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட இவர்களால் தான் முடியும்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயலலிதா எழுதிய உயில் தன்னிடம் தான் இருப்பதாகவும் அதில் அனைத்து சொத்துக்களும் தன்னுடைய பெயரிலும் தனது அக்கா தீபா பெயரிலும் இருப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் மற்றும் பிற 8 சொத்துக்கள் தனது பெயரில் இருப்பதாக தீபக் குறிப்பிட்டார். அதன் பின்னர் தீபக் போயஸ் கார்டன் இல்லத்தில் தனது குடும்பத்துடன் குடியேற இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை கூட்டத்தை மூன்றாவது முறையாக கூட்டினர். இந்த கூட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கி அதை நினைவு இல்லமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
போயஸ் கார்டன் இல்லத்தில் குடும்பத்துடன் குடியேற ஜோதிடர்களிடம் நல்ல நாள் பார்த்துக்கொண்டிருந்த தீபக்கிற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை எடுத்த முடிவு அவரது ஆசைக்கு அப்பு வைக்கும் விதமாக அமைந்துள்ளது.