Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திறந்தவெளியில் அரசியல்: இன்று முதல் கலத்தில் ஈபிஎஸ்!

திறந்தவெளியில் அரசியல்: இன்று முதல் கலத்தில் ஈபிஎஸ்!
, சனி, 19 டிசம்பர் 2020 (09:05 IST)
தமிழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்று முதல் நடத்த அனுமதி. 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாதாமாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கொரோனா அபாயம் கருதி வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து மீண்டும் டிசம்பர் 19 முதல் அரசியல், மத நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை திறந்த வெளியில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் திறந்தவெளியின் அளவு பொறுத்து அதில் கொள்ளக்கூடிய மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியது.
 
இந்நிலையில் தமிழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்த இன்று முதல் நடத்த அனுமதி. இதனால் இன்று முதல் சட்டச்சபடை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏமிரா இதி...? OLX-ல் விற்பனைக்கு வந்தது மோடியின் அலுவலகம்!!