Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2020- ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் – ஐபிஎல் கிரிக்கெட் ஒரு பார்வை !

2020- ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் – ஐபிஎல் கிரிக்கெட் ஒரு பார்வை !
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (23:53 IST)
இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தபடும் ஐபிஎல்-டி-20 கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு முதலில் நடக்குமா நடைபெறாதோ என சந்தேகம் வலுத்தது.

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களைக்கொண்ட இந்த ஐபிஎல் திருவிழா நடைபெறுவதே ஒரு சாதனை தான். பல நாட்டு வீர்களை அவர்களிந்திறமைக்கேற்ற ஏலத்தில் எடுத்த 8 அணிகள் அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி எடுத்து, தங்கள் தேசிய அணி வீர்களுக்கு எதிராகவே எதிரணியில் இருந்து மோதும்போது, தங்கள் திறமை மேலும் கூர்தீட்டப்படும் என்று நிரூபிப்பதைபோல் அவர்க்ளின் திறமையாக விளையாட்டு முறையும் நாகரீகமான அணுகுமுறையும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. இத்தனை சுமை மற்றும் பளு நிறைந்த வேலையை பிசிசிஐ திறத்துடன் செயல்பட்டு அத்தனைபேரையும் ஒருங்கிணைப்பதற்காகவே நாம் பாராட்டியாக வேண்டும். முதலில் பல்வேறு கிளப் அணி வீர்கள் இணைந்து விளையாடி வரும் கால்பந்துபோல் இது கிக்கெட்டுக்குப் புதுமையாக இருந்தாலும் பரந்த மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் விதத்தில்வீரரக்ளின்   அனுபத்தைப் பெருக்குவதுடன் அவர்களின் ஆளுமையை வளப்பதற்கும் பல்வேறு நாட்டு வீரர்களுடன் சீனியர் ஜூனியர் என்ற வேறுபாட்டைக் களiந்து சுமூகமாகப்  பழகித் தங்களின் ஆற்றலை இவ்விளையாட்டில் புதுப்பிப்பதற்கும் இந்த ஐபிஎல் ஒரு களம் அமைத்துக்கொடுக்கிறது என்றாலும் நடராஜன் சூர்யகுமார் போன்ற் பல இளம் நட்சத்திரங்கள் தங்களுக்குக் கிடைந்த இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களைப் பொன்முட்டையிடும் வாத்துகளாக மாற்றிக்கொண்டது அவர்களின் சாதுர்யம் என்றே மெச்சத் தோன்றுகிறது.
webdunia

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில பல நிகழ்வுகள் நடந்தேறின. சென்னை கிங்ஸில் ஆஸ்தான வீரர்கள் சுரேஷ் ரெய்னா,  ஹர்பஜன் இல்லாதது அந்த அணிக்கு பெரும்பின்னடைவு. ஆனால் தோனி எனும் இமயம் அவர்கள் இல்லாததைச் சரிசெய்யமுயன்றாலும் இளம் வீர்களின் ஸ்பார்க் இல்லாததைக்கண்டு வாய்ப்புக்கொடுக்கப் பயந்தார். அணி தோல்விக்கு மேல் தோல்விகண்டு சூப்பர் லீக்கில் கலந்துகொள்ளமுடியாமல் வெளியேறியது.

இதேபோட்டியில் தனது ஓய்வை அறிவித்த தோனியின் முடிவு உலகக் கிரிக்கெட் ரசிகர்களுக்கே கண்ணீர் வரழைத்தது என்றாலும் தன் மீதான சர்ச்சைகளையும் தேசிய அணியின் உடல்தகுதித் தேர்வில் தேறாதது, இளம்வீரர்கள் பார்ம் போன்றவற்றை மனதில் வைத்து தன் மீதான ஓய்வுகுறித்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாலும் அவர் 2020 போட்டியில் இன்னும் சில காலம் விளையாடுவார் எனத் தெரிகிறது.

இந்த ’’ஐபிஎல் 13 வது சீசன்’’ தொடர் எட்டு அணிகளுடன் பெரும் எதிர்பார்ப்புகளுடன் செப்டம்பர் 19 தொடங்கப்பட்டது. மொத்தம் 56 லீக்போட்டிகள் கொண்டது.

இறுதிப்போட்டி கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது.

தொடக்கத்தில் சீனாவின் விவோ நிறுவனத்தில் ஸ்பான்சர்சிப்பை இழக்க நேர்ந்தாலும் டிரீம் நிறுவனத்தைக் குறுகிய காலத்தில் பிடித்து குறிப்பிட கால இடைவெளியில் தாமதமாயினும்கூட போட்டியை இந்தக் கொரொனா காலத்தில் சிரத்தை மேற்கொண்டு நடத்திக்காட்டிய பிசிசியை சேர்மன் கங்குலியின் நிர்வாகத்திறமை பெரிதும் பாராட்டத்தக்கது.

அடுத்த ஆண்டில் மேலும் இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேவாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

ஐபிஎல் போட்டிக்கு எப்போதும் சினிமாபோல் மவுசுகுறையாது என்பது மைதானத்தில் இம்முறை ரசிகர்கள் இல்லையென்றால்ம், சமூக ஊடகங்களிலும் தொலைகாட்சிகளும் பார்த்து ரசித்த ரசிகர்ளே சாட்சி.

இளையதலைமுறை விளையாட்டுவீரர்களின் திறமைக்கு வாய்ப்பளிக்கும் ஐபிஎல் என்று வாழ்க.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

60 ஆயிரம் நர்ஸுகளுக்கு கொரோனா உறுதி !!அதிர்ச்சி சம்பவம்