மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மானியத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை கடந்த ஆண்டை விட கணிசமான அளவில் குறைத்து நிதி அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவசாய உரத்திற்கான மானியம் 1.34 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.79,530 ஆக குறைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கான மானியம் ரூ.4.2 லட்சம் கோடியில் இருந்து ரூ 2.4 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோலிய பொருட்கள் மீதான மானியம் ரூ.38,790ல் இருந்து தற்போது ரூ 12,995 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மானிய நிதி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது எதிர்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.