Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதவி இருக்கும் போதே வளர்த்துவிடனும்... ஓபிஎஸ் வழியில் ஈபிஎஸ்!!

பதவி இருக்கும் போதே வளர்த்துவிடனும்... ஓபிஎஸ் வழியில் ஈபிஎஸ்!!
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (12:27 IST)
ஓபிஎஸ் தனது மகனை அரசியலில் இறக்கியது போல ஈபிஎஸ் தனது மகனை அரசியலில் களமிறக்க திட்டமிட்டு வருகிறாராம். 
 
தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது மகனையும் அரசியலில் இறக்க திட்டமிட்டு வருவதாக அவர் இல்லாத நேரத்தில் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. 
 
அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை என பேசி திமுகவை விமர்சித்து வந்த நிலையில் ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கப்பட்டார். ஓபிஎஸ் தவிர்த்து ஜெயக்குமார், ராஜன் செல்லப்பா ஆகியோரும் தங்களது வாரிசுகளை களமிறக்கினர். 
webdunia
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து எடப்பாடியார் தன் வாரிசான மிதுனை கட்சியில் முன்னிறுத்த முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. கட்சி நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். 
 
அதனைத்தொடர்ந்து கட்சிக்குள் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும், தான் பதவியில் இருக்கும் போதே தனது மகனையும் வளர்த்துவிட வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் விஜய் மல்லையாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் – அமலாக்கத்துறை வாதம் !