ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் மீதான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் தேதிகைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் பின்னர் மேலு 5 நாட்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது அவர் டெல்லி சிபிஐ வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இதேப் பிரிவில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளது. அந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு சிதம்பரம் மனு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையில் ‘பணமோசடி என்பது சமூகத்திற்கும் தேசத்திற்கும் எதிரான குற்றமாகும். இந்த வழக்கில் மீடியா குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட பிறகுதான் ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். அதனால் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஜாகிர் நாயக் உள்ளிட்டோரின் வங்கி மோசடி வழக்குகளிலும் இதையே பின்பற்றினால் பாதகமாக அமையும்’ எனக் கூறியது.
இதைக் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் முடிவை செப்டம்பர் 5 ஆம் தேதி எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.