தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தயாநிதி மாறன், எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு னு அக்டோபர் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.