சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விசா சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தார்.
இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊர்வலமாக சென்று ராஜ்பவனில் உள்ள ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி உடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.
விஷச்சாராயம் அருந்தி அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.