Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக வரலாறே தெரியாது.. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

Advertiesment
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக வரலாறே தெரியாது.. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
, வியாழன், 18 மே 2023 (14:22 IST)
எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறும் தெரியாது, அண்ணா திமுக வரலாறும் தெரியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கடும் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதிமுக கடந்த சில மாதங்களாக இரண்டாக உடைந்து இபிஎஸ், ஓபிஎஸ் அணி என இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி ஆணியை அதிமுகவாக ஏற்றுக் கொண்டதை எடுத்து இரட்டை இலை சின்னமும் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் இரு அணிகளுக்கு இடையே வார்த்தை போர்கள் அவ்வப்போது நடைபெற்று வரும். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ’எடப்பாடி பழனிச்சாமி எனக்கு ஜூனியர் தான், நான் 2001 ஆம் ஆண்டிலேயே அமைச்சராகிவிட்டேன் , ஆனால் எடப்பாடி பழனிச்சாமி 2011ல் தான் அமைச்சரானார், அவர் எனக்கு ஜூனியர் என்று தெரிவித்தார்.
 
மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு திராவிட வரலாறும் தெரியாது அண்ணா திமுக வரலாறும் தெரியாது. தமிழக அரசியலை இந்திய அரசியலை உலக அரசியலை என்னோடு அவர் விவாதிக்க தயாரா என்று சவால் விட்டு உள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சி தலைவர் அதிரடி அறிவிப்பு..!