மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்று பிரதமரிடம் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. 
	
 
									
										
								
																	
	 
	கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 900 பேருக்கு மேல் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிறது. 
	 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	இந்நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார் என தெரிகிறார். 
	 
 
									
										
			        							
								
																	
	அதோடு, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்றும், ரயில் மற்றும் விமான போக்குவரத்தையும் தற்போதைக்கு துவங்க கூடாது என முதல்வர் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.