தூத்துக்குடி சென்ற எடப்பாடியார்; குறுக்கே வந்த மாடு!? – கார் விபத்தால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (09:34 IST)
தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனத்தை தொடர்ந்து சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென் தமிழக பகுதிகளில் சுற்றுப்பயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடியிலிருந்து சேரன்மாதேவிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கட்சியினர் வாகனங்களும் அணி வகுப்பாக சென்றன.

இந்நிலையில் வல்லநாடு அருகே முதல்வரின் வாகனம் கடந்து சென்ற நிலையில் பின்னால் வந்த கட்சியினரின் கார் ஒன்று திடீரென சாலை தடுப்பில் மோதியது. இதனால் பின்னால் வந்த காரும் தடுப்பில் மோதிய காரின் மீது மோதியதால் பரபரப்பு எழுந்தது.

இரு கார்களும் சேதமடைந்திருந்தாலும் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கார்கள் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால் நிலைத்தடுமாறி கார் மோதியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 குறைவு.. இன்னும் சரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments