Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிராமங்கள் புத்துயிர் பெற சீனாவின் பன்முக அணுகுமுறை

கிராமங்கள் புத்துயிர் பெற சீனாவின் பன்முக அணுகுமுறை
, திங்கள், 4 ஜனவரி 2021 (23:35 IST)
மனிதன் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருந்தாலும், அவனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அறிவியல் சாதனைகள் உதவாது. வேளாண்மை தொழிலில் மனித குலத்தின் ஆதி தொழிலாக மட்டுமல்லாது வானளாவிய அறிவியல் வளர்ச்சி காலத்திலும், அரிசி உற்பத்திக்கு விவசாயத்தையும் விவசாயிகளையும் மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. 
 
விவசாயப் பணிகள் செய்யும் எந்த விவசாயியும் நகர்ப்புறத்தில் நாகரீக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க முடியாது. வேளாண் பணியில் என்னதான நவீன அறிவியல் வசதிகளை புகுத்தினாலும், கிராமப்புறங்களில் வேளாண் தொழில் செய்து வரும் விவசயிகள் வாழ்வு நவீன மயமானது இல்லை. புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விளைச்சல் தொடங்கி வேளாண் பொருட்களின் விறபனை வரைக்கும் நவீனமயமாக்கத்தை புகுத்தி, கிராப்புறங்களின் பசுமையை விவசாயிகளின் வாழ்விலும் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரும் பெரும் விருப்பமாக உள்ளது.
சீன அதிபர் ஷிச்சின்பிங் அண்மையில் மத்திய ஊரகப்பணி மாநாட்டில் ஒரு முக்கியமான உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் கிராமங்களுக்கு புத்துயிர் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக பொது வளங்களை பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும், இந்த பணிக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் தொடர்ந்து அணிதிரட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். 
 
வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புறங்களின் புத்துயிர் என்பது வரலாறு காலத்தில் இருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. 
 
எல்லா வகையிலும் ஒரு மிதமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான இலக்கை நிர்ணயித்த பின்னர், சீன அரசாங்கம் அனைத்து பங்குதாரர்களையும் வறுமைக்கு எதிராக போராட அணிதிரட்டியது. இறுதியில் முழுமையான வறுமையை ஒழித்தப் பின்னர்  ஒரு நவீனமயமான நாட்டை ஒரு முழுமையான வழியில் கட்டியெழுப்ப முடியும் என்று அது நம்புகிறது. விவசாயம் மற்றும் கிராமப்புறங்களை நவீனமயமாக்குவது அதன் அடிப்படையாகும். இருப்பினும், தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலில் அது பின்தங்கியிருக்கிறது. 
 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகள் ஒன்றுக்கொன்று வலுப்படுத்தப்பட வேண்டும் என்றால் "இரட்டை சுழற்சி" என்ற புதிய மேம்பாட்டு முறையை விரைவாக உருவாக்க வேண்டும். சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை பராமரிப்பதற்கு தற்போது விவசாயம், கிராமப்புறங்கள் மற்றும் விவசாயிகள் நிலையான பங்கை வகிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில், முதலில் வறுமை ஒழிப்பை நிறைவேற்றுவதற்கான புதிய மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும், இரண்டாவதாக, கிராமப்புற மறுமலர்ச்சியை ஊக்குவிக்க, உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் விவசாய பொருட்களின் போதுமான விநியோகத்தை பராமரிக்க வேண்டும். 
 
இந்த நோக்கத்திற்காக, குறைந்தபட்சம் 120 மில்லியன் ஹெக்டேர் நில உணவு உற்பத்திக்கு தேவைப்படுவதால் விளைநிலங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்; உயர்தர விளைநிலங்களை உருவாக்குதல், கறுப்பு மண் பகுதியைப் பாதுகாத்தல் மற்றும் விளைநிலங்களின் வளம் குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
 
வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை முடுக்கி, சீனாவின் நவீன விவசாய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தொழில்நுட்ப சிக்கல்களை சமாளித்தல்; தானிய விவசாயிகளுக்கான மானியங்களை அதிகரித்தல், குறைந்தபட்ச கொள்முதல் விலைக் கொள்கையை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகளை தானியங்களை வளர்க்க ஊக்குவிப்பதற்காக காப்பீட்டு பாதுகாப்பை விரிவுபடுத்துதல் அவசியமாகும். மேலும் வலுவான கிராமப்புற தொழில்களை உருவாக்க வேண்டும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்; ஒரு சிறந்த கிராமப்புற சுற்றுச்சூழல் சூழலை உருவாக்க ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தவறான பயன்பாடு, பயிர் வைக்கோல் எரித்தல், போன்ற மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல்; கிராமப்புறங்களில் வாழும் சூழலை மேம்படுத்த கிராமப்புற உள்கட்டமைப்புகளின் கட்டுமானத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகங்கங்ளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று சீன அதிபர்  உத்தரவிட்டார்.  
 
கிராமப்புறம், விவசாயம் மற்றும் விவசாயி தொடர்பான 1-ஆம் ஆவணத்தை, சீன அரசு ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் வெளியிடுவது வழக்கமாகும். எனவே,  தற்போது, இந்த 1-ஆம் ஆவணம், கிராமப்புறம் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியில் சீனா கவனம் செலுத்துவதை எடுத்துக் காட்டுவதாக கருதப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிளக்ஸ் போர்டுகளை சேலைகள் போட்டு மூடிய திமுக வினர்