தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்டு, அதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில், டாக்ஸி, ஆட்டோ டிரைவர்கள், தினக்கூலிகள் ஆகியோரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த ஊரடங்கில் உதவும் விதமாக ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.