இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் சென்னையில் ஆக்ஸிஜன் சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்குள் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதுவரை மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட 7 நகரங்களில் இவ்வாறாக ஆக்ஸிஜன் சப்ளை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது சென்னையிலும் மருத்துவமனைகள் மற்றும் மருத்து நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.